இரு முஸ்லிம் நபா்களின் அடையாள அட்டைகள் மீட்பு..! கிழக்கு மாகாணத்தை சோ்ந்தவா்களுடையதாம்..

ஆசிரியர் - Editor
இரு முஸ்லிம் நபா்களின் அடையாள அட்டைகள் மீட்பு..! கிழக்கு மாகாணத்தை சோ்ந்தவா்களுடையதாம்..

யாழ்.இராசாவின் தோட்டம் தேவாிக்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபா்களில் தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாாினால் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் இரண்டும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவரீர்குளம் பகுதியிலுள்ள குளத்திற்கு இன்று காலை குளிக்க சென்றவர்கள் அங்கு இரண்டு அடையாள அட்டைகள் இருப்பதை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தேசிய அடையாள அட்டைகளையும் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Ads
Radio
×