மாணவா்களை விடுதலை செய்..! பல்கலைக்கழக மாணவா்கள் வீதியில் இறங்கி போராட்டம்..

ஆசிரியர் - Editor
மாணவா்களை விடுதலை செய்..! பல்கலைக்கழக மாணவா்கள் வீதியில் இறங்கி போராட்டம்..

தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவா்கள் மற்றும் சிற்றுண்டிசாலை நடத்துனா் ஆகியோரை விடுதலை செய்யக்கோாி மாணவா்கள் இன்று கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனா். 

யாழ்.பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் 

சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில்உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Radio
×