நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் வாள்வெட்டு..! இளம்பெண் உட்பட 4 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor
நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் வாள்வெட்டு..! இளம்பெண் உட்பட 4 போ் படுகாயம்..

யாழ்.கச்சாய்- பாலாவி கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 4 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

பாலாவி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தினார்கள்.

அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28) , தங்கராசா ரஜீவன் (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் 

யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளை அயலவரான அருணாச்சலம் பொன்னையா (வயது 62) என்பவரும் காயமடைந்த நிலையில் 

சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த வாள் வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் முகமாகவே 

இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாராணைகளில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×