காத்தான்குடி அரசியல்வாதி ஒருவாின் ஆயுத குழு 35 தமிழா்களை படுகொலை செய்தது..! இராணுவ தளபதிக்கு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
காத்தான்குடி அரசியல்வாதி ஒருவாின் ஆயுத குழு 35 தமிழா்களை படுகொலை செய்தது..! இராணுவ தளபதிக்கு அறிவிப்பு..

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போன 35 தமிழா்கள் காத்தான்குடியை சோ்ந்த பிரபல அரசியல்வாதியின் கீழ் இயங்கிய ஆயுத குழுவினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவா்களுடைய சடலங்கள் மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு தமிழ் உணா்வாளா்கள் அமைப்பின் தலைவா் கணபதிப்பிள்ளை மோகன் கூறியுள்ளாா். மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், கடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கே.பிஏ.ஜயசேகர ஊடாக இலங்கை இராணுவத் தளபதிக்கு ஒரு தகவலை அனுப்பியுள்ளோம். 

இவ்வாறான சம்பவங்கள் காத்தான்குடியில் இருக்கின்ற ஒரு பிரபலமான அரசியல்வாதியின் தலைமையின் கீழே இயங்கிய ஆயுதக் குழுக்களினால் இது நடைபெற்றிருப்பதாகவும், குறித்த தமிழ் மக்களின் சடலங்கள் மட்டக்களப்புப் மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதியிகளிலே புதைக்கப்பட்டிருக்கின்றன 

எனும் செய்தியையும் நாங்கள் அறிவித்திருக்கின்றோம். குறித்த இடங்களில் சடலங்களை புதைக்கப்பட்டுள்ள விடயங்களை அடையாளப்படுத்துவதற்குரிய சாட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன என்பதையும் மிகவும் உறுதியாகவும், தெளிவாக கூறியிருக்கின்றோம். 

இவ்விடத்தில் இலங்கை இராணுவத்தினரின் மீது நம்பிக்கை வைத்து, நாங்கள் இந்த தகவலை வழங்கியிருக்கின்றோம்.

சம்பந்தப்பட்ட இடங்களைத் தோண்டி சடலங்கள் கண்டறியப்பட்டால், ஏராளமான உண்மைகள் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மிக முக்கியமாக காணாமல்போன பிரபலங்கள், அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் தனிப்பட்ட தொழிற் போட்டி காரணங்களுக்காகவும் காணாமல் போயிருக்கின்றார்கள். 

அவ்வாறானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பிலே பல இடங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களை எமது சாட்சியங்களைக் கொண்டு, தோண்டியெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கையை விடுத்திருக்கின்றோம்.

இந்த விடயம் கடந்த மூன்று நாட்களுக்குள்ளேதான் நாங்கள் அறிந்தோம், அதற்கிணங்க நாங்கள் எமது கோரிக்கையை அனுப்பியுள்ளோம். இந்த விடயம் மூடி மறைக்கப்படக் கூடும் என்பதற்காக நாங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்றோம். 

பாதுகாப்புக் காரணங்களுக்காக உடல்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை நாம் வெளியிடவில்லை. நிச்சயமாக எமது சாட்சியாளர் இராணுவத்தினருக்கு உரிய இடங்களை அடையாளப்படுத்துவார்.

இவ்வாறான சம்பவங்கள் காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் கீழ் இயங்குகின்ற ஆயுதக்குழுக்களால்தான் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது வரைக்கும் காத்தான்குடியில் ஆயுதங்கள் இருக்கத்தான் செய்கின்றன என அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு