கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதே இஸ்லாமிய தீவிரவாதிகளின் நோக்கம்..!

ஆசிரியர் - Editor I
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதே இஸ்லாமிய தீவிரவாதிகளின் நோக்கம்..!

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்கவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்ததாகவும் கடுமையான சட்டங்கள் ஊடாக அது தடுக்கப்படாவிட்டால் கிழக்கில் இஸ்லாமிய அரசு ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவாக்கும். 

அதனை தடுப்பதற்கு ஆட்சியாளா்களிடம் வேட்டையாடும் மனோபாவம் இருக்கவேண்டும். கடந்த ஆட்சியாளா்களிடம் அத்தகைய மனோபாவம் இருந்தது. என சிங்களபூா் பல்கலைகழக பேராசிாியரும், பயங்கரவாத எதிா்ப்பு நிபுணருமான ரொஹான் குணரட்ண கூறியுள்ளாா். 

மேற்படி விடயம் தொடா்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் அவா் கூறியுள்ளதாவது, 

கேள்வி - தமிழீழ விடுதலைப் புலிகளை நாடு தோற்கடித்திருந்தது. இதேவேளை பிராந்தியத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளை விட்டு விட்டு இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஊடுருவ முடியுமென எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே தெற்காசியாவில் இலங்கையை களமாக உருவாக்கும் திட்டத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கொண்டுள்ளது ஏன்?

பதில் - விடுதலைப் புலிகளுடனான போரை தயார்ப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. கல்வி, பயிற்சி, அவர்கள் விருத்தி செய்திருந்த பாதுகாப்பு என்பவற்றினூடாக இது மேற்கொள்ளப்பட்டது.

அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும் வரை வேட்டையாடும் மனோபாவத்தை இலங்கைத் தலைவர்கள் கொண்டிருந்தனர். அதனையே நாங்கள் பாதுகாப்பு தொடர்பான மனோ பாவமென குறிப்பிடுகின்றோம்.

முன்னைய அரசாங்கம் பயங்கரவாதிகளை கைது செய்தல் அல்லது கொல்லுதல் மூலமும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தீவிரவாதிகளை கைது செய்ததன் மூலமும் அச்சுறுத்தலை இல்லாமல் செய்தது. அதன் பின்னர் கைது செய்தவர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்தது.

தீவிரவாதிகளை அரசாங்கம் கைது செய்யாது இருக்கும் வரை பயங்கரவாதிகளாகிவிடுவர்.

நலிந்த நிலையிலுள்ள முஸ்லிம்களை அடிப்படைவாதத்திற்கு உட்படுத்தல், சமூகங்களுக்கு இடையிலான மத ரீதியான சமாதானத்தை குழப்புதல் என்பனவற்றை ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டு கிழக்கிலங்கையில் கலிபேற் (இஸ்லாமிய அரசு) மாகாணமொன்றை உருவாக்க அது திட்டமிட்டது.

கல்வியினூடாக வழிநடத்தப்பட்டும் தீவிரவாதிகள் கடுமையான சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் வளர்ச்சியடைந்துவிடும். இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் இன் கேந்திரமாக மேலெழும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு