இந்தியாவின் ஒரு பகுதி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமா..? சா்வதேச அளவில் பரபரப்பு..
இந்தியவின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கூறியுள்ள கருத்தினால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள பகுதிக்கு "வில்லாயா ஆஃப் இந்த்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான Amaq News Agency வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் அதற்கு தங்கள் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காஷ்மீர் - ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பெரும் துப்பாக்கி சண்டை இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருக்கமான உறவு வைத்திருந்த இஷ்ஃபக் அகமது ஷோபி கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துருந்தது.
இந்நிலையிலேயே, இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்துவிட்டதாக ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அண்மையில், இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது இவ்வாறு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.