ஜனாதிபதி,பிரதமருக்கு முகத்தில் அறைந்த மஹிந்த தேஷப்பிரிய..! பதவி விலக நோிடும் என எச்சாிக்கை..!
நாட்டின் பாதுகாப்பு நிலமைகளை குறித்த தோ்தலை பிற்போட நினைப்பது சாியல்ல. அவ்வாறு நினைப்பது பயங்கரவாதத்திற்கு சமனானதாகும் என தோ்தல்கள் ஆணையாளா் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் எதிர்வரவுள்ள தேர்தல்கள் தொடர்பில் பேசினார். இதன்போது அண்மைய தாக்குதல்கள் வரும் தேர்தலை பாதிக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில்வழங்கிய அவர்,
பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை பிற்போட எதிர்ப்பார்ப்பார்களாயின் அது தீவிரவாதத்திற்கு சமாந்தரமானது. பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபர்கள் கைது செய்யப்படவேண்டியதே இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படை செயற்பாடாகும்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைத்த அவர், மாகாண சபை தேர்தலை தீர்மானித்தமைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியாது போனால், ஜனவரி 27ம் திகதி தாம் வெளியிட்ட கருத்துக்கு அமைய பதவி விலக நேரிடும் என்றார்.