மகிந்தவின் வழியில் தலைகீழாக நிற்கும் கோத்தா!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும், படங்கள் வெளியாகியுள்ளன. யோகா பயிற்றுவிப்பாளர் நந்த சிறிவர்தனவின் பயிற்சி நிலையத்தில் கோத்தாபய நீண்டகாலமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பொது ஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்ச, தான் யோகசனப் பயிற்சியில் ஈடுபடும் படங்களை இப்போது வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற படங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.