யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றிய தலைவா், செயலாளரை விடுதலை செய்ய இணக்கம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றிய தலைவா், செயலாளரை விடுதலை செய்ய இணக்கம்..!

கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தொிவித்துள்ளனா். 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளாா். அவருடைய ஊடக பிாிவு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த  கலந்துரையாடலில், 

யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ் ,யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.

ஜனாதிபதியினால் , ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு