SuperTopAds

பாரிஸில் பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் கொள்ளையர்கள் கைவரிசை!

ஆசிரியர் - Editor II
பாரிஸில் பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் கொள்ளையர்கள் கைவரிசை!

பிரான்ஸ் தலைநகர், மத்திய பாரிஸிலுள்ள பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் கொள்ளயர் குழுவால் 4 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது......
மத்திய பாரிஸிலுள்ள பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் கீழ் தளத்தில் உள்ள நகை கடையில் நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் ஐந்து கொள்ளையர்கள் கொடரி ஆயுதங்களை பயன்படுத்தி கடை ஜன்னல்களை உடைத்துள்ளனர்.

இதனையடுத்து, சுமார் 4 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகளைத் அவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடமையில் இருந்த காவல் அதிகாரிகளின் முயற்சியில் கொள்ளையிடப்பட்ட நகை மற்றும் பெறுமதி வாய்ந்த கைக்கடிகாரங்களில் ஒரு பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாவும், இருவர் மோட்டார்சைக்கிளில் தப்பியோடியதாகவும் பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாரிஸ் சேய்ன் நதிக்கரையோரமாக உள்ள பாதுகாப்பு மிகுந்த இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இளவரசி டயானா 1997ஆம் ஆண்டு கடைசியாக வாகன விபத்தில் இறப்பதற்கு முன் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் கொள்ளையர்கள் கைவரிசை!