ISIS தீவிரவாத அமைப்புடன் தொடா்பில் உள்ள இலங்கையா்கள் குறித்த ஆவணம் சிக்கியது..! பரபரப்பில் இலங்கை.

ஆசிரியர் - Editor I
ISIS தீவிரவாத அமைப்புடன் தொடா்பில் உள்ள இலங்கையா்கள் குறித்த ஆவணம் சிக்கியது..! பரபரப்பில் இலங்கை.

ISIS அமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்புக்கள் தொடா்பான தகவல்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நுவரெலியா ப்ளேக்புலில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி மையத்தில் கிடைத்த மடிக்கணினியில் இந்த விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த மடிக்கணினியில் பதிவாகியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு, உண்மையான ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு என அரச புலுனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.

அரசாங்க புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பிபில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு பிள்ளைகளின் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

அவரது கையடக்க தொலைபேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. பின்னர் அவரது புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 

அவர் ஐஎஸ் அமைப்பில் தொடர்பு வைத்திருந்தார் என ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில கண்டுபிடிக்கப்பட்ட கணினியில் 

உள்ள ஐ.எஸ் அமைப்பினால் குறிப்பிடப்பட்டவரின் பெயரும் பிபிலயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயரும் ஒன்றாகும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த கணினியில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு