கொலைவெறி தாக்குதல் நடத்த திட்டமிடுவதை குறித்து பேச கூடாது..! மனைவியை அடித்து சித்திரவதை செய்த தீவிரவாதி.

ஆசிரியர் - Editor I
கொலைவெறி தாக்குதல் நடத்த திட்டமிடுவதை குறித்து பேச கூடாது..! மனைவியை அடித்து சித்திரவதை செய்த தீவிரவாதி.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக தேடப்பட்டுவந்த பாத்திமா தொடா்பாக அவருடைய தயாா் பல அதிா்ச்சி தகவல்களை வெளியிட்டிருப்பதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

அந்த செய்திகளில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட முக்கிய நபர்களில் பத்திமா லதீபாவும் ஒருவராகவும்.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி மாலை 1 - 2 மணியளவில் மாவனெல்ல பகுதியில் தனது தந்தையின் வீட்டில் வைத்து பத்திமா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாத்திமாவுக்கு 24 வயதாகின்றது. அவர் பாத்திமா சஹீடா என்றோ அழைக்கப்படுகின்றார்.

பாத்திமா மாவனெல்ல பகுதியிலுள்ள புத்தர் சிலைகளை உடைக்கும் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 29 வயதுடைய மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லாவின் மனைவியாகும். 

சாதிக் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என தற்போது பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் சில புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கண்டுபிடித்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட பாத்திமா சஹீடாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பல தகவல் வெளியாகியுள்ளது.

கணவர், பாத்திமாவை அழைத்து சென்று மறைந்திருந்தார். பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி பாத்திமாவுக்கு ஒரு போலி அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். அந்த அடையாள அட்டை மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுடையதென தெரியவந்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி பாத்திமா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சாதிக் கண்டி பகுதிக்கு சென்றுள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாத்திமா சென்றது வெள்ளிக்கிழமை தினத்திலாகும். ஓய்வு பெற்ற ஆசிரியரான தனது தந்தை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார். 

வீட்டின் முன் பகுதி பூட்டியிருந்தமையினால் பின்வாசல் பகுதியில் தாயை பாத்திமா அழைத்துள்ளார். இதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து பாத்திமாவின் தாயார் தெரியப்படுத்தியுள்ளார்.

“எனது மகளின் பெயர் பாத்திமா லதீபா என ஊடகங்களில் வெளியாகியது. எனினும் பாத்திமா சஹீடா என்பதே அவரது உண்மையான பெயராகும். 

அவர் எனது மூத்த மகளாகும். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். நால்வரும் படிப்பில் சிறந்தவர்களாகும். பாத்திமாவும் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பு பெற்றவாகும். எனினும் 2015ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கிடைத்த வரணுக்கமைய அவருக்கு திருமணம் நடந்தது. மகளின் மாமனார் மிகவும் நல்ல மனிதராகும். அவர் ஒரு மௌலவி. சிறந்த குணம் படைத்த ஒருவராகும். எனினும் அவரது மகன் இவ்வாறு நாட்டுக்கு தீ வைப்பார் என நினைக்கவில்லை.

எனது மகளுக்கு ஒன்றும் தெரியாது. புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னர் எதுவும் சொல்லாமல் மருமகன் அவரை அழைத்து சென்றுள்ளார். 

மகள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிப்பதாக பொலிஸாருக்கு நாங்கள் வாக்குறுதி வழங்கினோம். நாங்களும் நல்ல மக்களுடன் தான் வாழ்கின்றோம். எங்களும் இந்த நாட்டின் சமாதானமே முக்கியமாகும்.

அதற்கமைய பின்வாசல் வழியாக வந்த மகள், தந்தை எங்கே? தந்தையுடன் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் என மகள் கூறினார். அப்போதே மகளுக்கு ஒன்றும் தெரியாதென்பது எனக்கு தெரியவந்தது.

மகளிடம் பேசினேன் இது தொடர்பில். அப்போது கணவன் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை மனைவியாகவே பார்க்கவில்லை எனவும் மகள் கூறினார்.

தான் செய்யும் விடயங்களை வெளியே கூறினால் கொலை செய்யப்படுவார் என கணவர் மிரட்டியுள்ளார். பல இடங்களில் மகளை அடைத்து வைத்துள்ளார்.

திடீரென அவருக்கு அதிகம் பணம் கிடைத்துள்ளது. வீட்டிற்கு தேவையான அனைத்திற்கும் அதிகமாக பணம் செலவிட்டுள்ளார். 

எனினும் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று கணவர் பதற்றமாக இருந்துள்ளார். எனினும் பாத்திமாவுக்கு அந்த தகவல் தெரியாது.

கணவனின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு பாத்திமா அமைதியாகவே இருந்துள்ளார். அத்துடன் நாங்கள் நினைப்பது போன்று அல்ல அவர், 

மிகவும் ஆபத்தானவர் எனவும் அவருக்கு பெரிய குழு ஒன்றும் உள்ளதெனவும் பாத்திமா கூறியுள்ளார். அதற்கமைய பாத்திமாவின் தந்தையை அழைப்பதற்காக பள்ளிவாசலுக்கு சென்றேன்.

அவருடன் பேசிய பின்னர் மகள் இருக்கும் இடத்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினேன். மகள் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் மருமகன் கைது செய்யயப்பட்டார்” என பாத்திமாவின் தாயார் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு