SuperTopAds

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி நீக்கம்..! தகுதிவாய்ந்த அதிகாாியாக பேராசிாியா் க.கந்தசாமி நியமனம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி நீக்கம்..! தகுதிவாய்ந்த அதிகாாியாக பேராசிாியா் க.கந்தசாமி நியமனம்.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இ. விக்கனேஸ்வரன் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக ( Compitent Authority) யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 

இந்த நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி நகர திட்டமிடல் , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இன்றிரவு வெளியிடப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும், 

யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கான நியமனம் குறித்து உயர் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.பல்கலைக் கழக சட்டத்துக்கமைவாக புதிய துணைவேந்தருக்கான தேர்தலை நடாத்தி, 

பல்கலைக்கழக பேரவையின் சிபார்சுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதியவரொருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் வரை - மூன்று மாத காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதிகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியரான க. கந்தசாமி, தனது பல்கலைக் கழக சேவையில் பௌதிகவியல் துறைத் தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும் பதவி வகித்ததுடன், யாழ். பல்கலைக் கழக பொறியியல் பீடம்,

 தொழில் நுட்ப பீடம் அகியவற்றின் ஸ்தாபக பீடாதிபதியாகவும் இருந்தவராவார். அத்துடன் இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவராகவும் இவர் செயற்படுகிறார்.