அகில இலங்கை ஜமியத்துல் உலமா தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் கடிதம். அறிக்கையில் திருத்தம் இல்லையேல் சட்ட நடவடிக்கை..!
அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் தலைவர் மௌலவி ரிஸ்வி முவ்தி தனது அறிக்கையில் உள்ள தவறான தகவல்களைத் திருத்திக்கொள்ளாவிடின் அமைச்சின் செயலகத்தால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்டவாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் N.K.G.K. நாமவத்த, அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் முன்னறிவித்தல் தொடர்பில் குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான சர்வமதத் தலைவர்களின் கூட்டத்தில் மெலளவி ரிஸ்வி முவ்தியினால் வௌியிடப்பட்ட கருத்து தொடர்பில் இந்தக் கடிதத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தபோது பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பிலான தகவல்கள்
மற்றும் ஆவணங்களையும் வழங்கியதாக தெரிவித்த கருத்து தொடர்பில் இந்தக் கடிதம் வரையப்பட்டுள்ளது. குறித்த மௌலவி மற்றும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் 2015 ஆம் ஆண்டில் சந்தித்தபோது பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பில் எந்தத் தகவல்களும் பரிமாறப்படவில்லை
என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மௌலவியால் வழங்கப்பட்ட குறித்த அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் தலைவர் மௌலவி ரிஸ்வி முவ்தி தனது அறிக்கையில் உள்ள தவறான தகவல்களைத் திருத்திக்கொள்ளாவிடின் அமைச்சின் செயலகத்தால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.