செம்மலை- நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்ட விவகாரம்..! நீதிமன்றம் பிணைமுறி கட்டளை.

ஆசிரியர் - Editor I
செம்மலை- நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்ட விவகாரம்..! நீதிமன்றம் பிணைமுறி கட்டளை.

முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஏற்பட்ட சமாதானக்குலைவு தொடர்பான வழக்குவிவகாரம் இன்றைய நாள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் இரு தரப்பினரும் அப்குதியில் வழிபடமுடியும், எவரும் அடுத்தவருடைய வழிபாடுகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. எனவும்,இருதரப்பினரும் அப்பகுதியில் கட்டடங்களை அமைப்பதானால் உரியவர்களிடம் அனுமதி பெறவேண்டும். 

எனவும் இவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் உரூபாய் இரண்டு இலட்சம் பெறுமதியான பிணைமுறியில் செல்லுமாறும் நீதிமன்றம் 06.05.2019 இன்றைய நாள் கட்டளையிட்டிருந்தது.அதேவேளை பிணைமுறியின் நிபந்தனைகளை மீறினால், 

உரிய தண்டனைகள் வழங்கப்படுமெனவும், இருதரப்பினரையும் மன்று எச்சரித்திருந்தது.மேலும் இது தொடர்பில் சிரேஸ்ட சட்டவளரான அன்ரன் புனிதநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் தொடர்பான கட்டளை மன்றினால் வழங்கப்பட்டது. குறித்த கட்டளையின் பிரகாரம் முதலாம் இரண்டாம் பகுதியினர் பிணை முறி ஒன்றினை நிறைவேற்றிச் செல்லுமாறு மன்று கட்டளை ஒன்றைப் பிறப்பித்திருந்தது. 

முதலாம் பகுதியினர் குறித்த இரண்டாம் பகுதியினரின் வழிபாட்டிற்கு எந்தவித இடையூறையும் செய்யக்கூடாதெனவும், ஏதாவது அபிவிருத்தி வேலைகள் செய்வதாக இருந்தால் உரிய உள்ளூராட்சித் திணைக்களம், 

உள்ளூராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக கட்டடங்களை அமைக்கவேண்டும் எனவும். அதேபோல் இரண்டாம் பகுதியினர் தங்களுடைய வழிபாடுகளை சுயமாக செய்ய முடியுமெனவும், இரண்டாம் பகுதியினருடைய வழிபாட்டிற்கு முதலாம் பகுதியினர் 

எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது எனவும் இரண்டாம் பகுதியினர் ஏதாவது, அதாவது நீராவியடிப் பிள்ளையார் கோவிலைச்சேர்ந்த பரிபாலன சபையினர் அந்தக் கோவிலில் ஏதாவது கட்டடங்கள் கட்டுவதானால் உரிய அனுமதிகளைப்பெற்று 

தங்களுடைய வேலைகளைச் செய்யலாம் எனவும், இரண்டு தரப்பினரும் இன்றைய நாள் தலா இரண்டு இலட்சம் உரூபாய் பெறுமதியான பிணை முறியில் செல்லுமாறும் நீதிமன்று கட்டளையிட்டது. இந்தப் பிணைமுறியின் நிபந்தனைகளை மீறினால் 

நீதிமன்று உரிய தண்டனை வழங்குமெனவும் மன்று கட்டளையிட்டது. இன்றைய தினம் குறித்த கட்டளையானது முதலாம் பகுதியினருக்கு சிங்கள மொழியிலே வழங்கப்பட்டதன் பினர் இரு பகுதியினரையும் வழக்கேட்டிலும், 

குறித்த பிணை முறியிலும் கையெழுத்துட்டுமாறும் மன்றுகட்டளையிட்டது. என்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு