SuperTopAds

குடும்பமாக தேவாலயம் சென்றோம். வீடு திரும்பும்போது நான் மட்டும் தனியாக வந்தேன்..! தன் குடும்பத்தையே இழந்த பெண்ணின் கண்ணீா் கதை..

ஆசிரியர் - Editor I
குடும்பமாக தேவாலயம் சென்றோம். வீடு திரும்பும்போது நான் மட்டும் தனியாக வந்தேன்..! தன் குடும்பத்தையே இழந்த பெண்ணின் கண்ணீா் கதை..

உயிா்த்த ஞாயிறு தினத்தில் கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் தனது குடும்பத்தையே இழந்து நிற்கும் பெண் ஒருவா் ஊடகங்களுக்கு கண்ணீா்மல்க கூறிய வாா்த்தைகள் செய்திகளாக வெளியாகியுள்ளது. 

குமாாி என்ற அந்த பெண் கூறுகையில், 

நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். இது கடவுள் கொடுத்த வரமாகவே நினைத்தேன். எனினும் எனது குடும்பத்தையும் எனது தங்கையின் குடும்பத்தையும் முழுமையாக பறிகொடுத்து விட்டோம்.

முழு குடும்பமாக உயிர்த்த ஞாயிறு ஆராதனைக்கு சென்று மீண்டும் தனியாகவே திரும்பிவர அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எங்கள் கிராமம் மிகவும் அதிஷ்டமான ஒரு கிராமமாகும். சுனாமி, வரட்சி உட்பட எந்தவொரு அனர்த்தத்திலும் பாதிக்கப்பட்டதில்லை. எனினும் இன்று நான் தனி மரமாகி விட்டேன்.

தாக்குதலில் உயிரிழந்த எனது மூத்த மகள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றிருந்தார். கடைசி மகன் பாடசாலை கல்வியை தொடர்ந்து வந்தார்.

மகள் இரண்டு பட்டம் பெற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தார். எனது பிள்ளைகள் பெரியவர்களாகிய போது எனது கையிலேயே உறங்குவார்கள். 

எல்லாம் இழந்து விட்டேன். இனியேனும் இந்த நாட்டில் ஒரு சமாதானம் கிடைக்க வேண்டும். எங்களுக்கு எவ்வித இனவாதமும் கிடையாது. 

எனக்கு பிள்ளைகளும் இல்லை குடும்பமும் இல்லை. இனி நான் கேட்பதற்கு என்ன உள்ளது? இனியாவது சமாதானம் இந்த நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்று மாத்திரமே கேட்பதற்கு உண்டு. 

என கண்ணீருடன் அவர் தெரிவித்தார்.