ஆளில்லா விமானம்..! பொலிஸாா் துப்பாக்கி பிரயோகம், கடலைநோக்கி பறந்து மறைந்ததாம்.

ஆசிரியர் - Editor I
ஆளில்லா விமானம்..! பொலிஸாா் துப்பாக்கி பிரயோகம், கடலைநோக்கி பறந்து மறைந்ததாம்.

கொழும்பு வான்பரப்பில் நேற்று இரவு பறந்த ஆளில்லா ட்ரோன் விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸாா் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனா். 

குறித்த ட்ரோன் கமரா வானில் பறப்பதாக கிடைத்த தகவலுக்கமைய நாரஹென்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ட்ரோனுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த ட்ரான் கமரா நிறுத்தாமல் பம்பலப்பிட்டியை நோக்கி பறந்துள்ளது.

கமராவை மீட்க பொலிஸார் கடும் முயற்சி செய்த போதும், அது கடலை நோக்கி பயணித்துள்ளது. இது தொடர்பில் கடற்படையினருக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து ட்ரோன் கமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில் பெருமளவு ட்ரோன் கமராக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு