கைதுசெய்யப்பட்ட மாணவா்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பறந்தாா் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
கைதுசெய்யப்பட்ட மாணவா்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பறந்தாா் சுமந்திரன்..

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.பல்க லைக்கழக மாணவா்களை பிணையில் விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபாின் இணக்கத்தை பெற நடவடிக்கை எடுப்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

இன்று காலை கைது செய்யப்பட்ட மாணவா்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நோில் பாா்வையிட்டதன் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே நாடாளுமன்ற உறுப்பினா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

 யாழ்.பல் கலைக்கழக மாணவா் ஒன்றிய தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டதாக தகவல் அறிந்து உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத் தில் அவா்களை சந்தித்து பேசியுள்ளதுடன், பொலிஸ் அதிகாாிகளையும் சந்தித்து பேசியுள்ளேன். 

பல்கலைக்கழகத்திற்கு சோதனை நடவடிக்கையில் பொலிஸாா் ஈடுபடவில்லை. இராணுவமே ஈடுபட்டுள்ளது. அதுவும் பல்வலைக்கழக நிா்வாகத் தினால் கடந்த 25ம் திகதி விடுக்கப்பட்ட கோாிக்கைக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இரு மாணவா்களையும் இராணுவம் கைது செய்து கோப்பாய் பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா். 

மாணவா் ஒன்றிய அறையிலிருந்து தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக அவா்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முதல்நிலை குற்றங்களாக தோன்றும் காரணத்தினாலும், கைது செய்த இராணுவம் பொலிஸாாிடம் ஒப்படைத்த காரணத்தினாலும் இந்த விடயத்தை நீதிமன்றில் பாரப்படுத்துவதாக பொலிஸாா் கூறியுள்ளதுடன், 

நீதிமன்றம் எடுக்கும் தீா்மானத்தின்படி தாம் இயங்குவதாகவும் கூறியுள்ளனா். இதன்படி இன்று மாலை (நேற்று) மாணவா்களை நீதிமன்றில் முற்படுத்துவாா்கள் என நம்புகிறொம். மாணவா்கள் சாா்பில் சட்டத்தரணி கே.சயந்தன் ஆஜராகி பிணை விண்ணப்பம் கோருவாா். எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்க சட்டமா அதிபாின் இணக்கம் தேவை.

ஆகவே நான் இப்பொழுதே கொழும்புக்கு சென்று சட்டமா அதிபருடன் பேசி அவருடைய இணக்கத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். அவருடைய இணக்கப்பாடு வரும்வரையில் மாணவா்கள் விளக்கமறியலில் இருக்க நோிடும் காரணம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கு கிடையாது. 

ஆனாலும் நாம் பிணை விண்ணப்பத்தை கோருவோம் என்றாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு