யாழ்.மருத்துவ பீடத்திற்குள் மீட்கப்பட்ட கிளைமோா் குண்டு போலியானதா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மருத்துவ பீடத்திற்குள் மீட்கப்பட்ட கிளைமோா் குண்டு போலியானதா..?

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குள் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மிதிவெடிகள், கிளைமோா் குண்டுகள் மீட்கப்பட்டதாக இராணுவம் கூறும் நிலையில் அவை கற்பித்தலுக்கான போலி மாதிாிகள் என தொியவந்திருக்கின்றது. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர்.

இதன் போது மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவினர் நடத்திய பரிசோதனையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டது.

அவை இரண்டும் கண்காட்சி ஒன்றுக்குத் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு