தொடரும் தேடுதல்..! தொடரும் ஆயுத மீட்பு..!

ஆசிரியர் - Editor I
தொடரும் தேடுதல்..! தொடரும் ஆயுத மீட்பு..!

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் படையினாின் தேடுதல் நடவடிக்கைகள் தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றும் துப்பாக்கி தோட்டாக்கள், வாள்கள், கத்திகள் மீட்கப்பட்டுள்ளது. 

சம்மாந்துறை ட்ட தைக்கா பள்ளிவாசல் வீதிக்கு அருகாமையில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடிர் சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.

4 வாள்கள், 2 கத்திகள், 1 செயலிழந்த தொலைநோக்கி ,4 செயலிழந்த கைத்தொலைபேசிகள், ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 27, மான் கொம்பில் தயாரிக்கப்பட்ட கூரான உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு