தலையாழி சுற்றிவளைப்பில் ஆவா குழு ரவுடி கைது.. நெஞ்சாக் மீட்பு.
யாழ்.தலையாழி பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது ஆவா குழு உறுப்பினா் ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இன்று அதிகாலை வியாழக்கிழமை இராணுவம், கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினர் இணைந்து சுற்றுவளைப்பு மற்றும் தேடுதவ் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது ஒரு வீட்டினை சோதனையிட்டபோது சைக்கில் செயின் மற்றும் அலுமினியப் பைப் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட வன்முறை ஆயுதம் ஒன்றினை பொலிஸார் மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து வீட்டிலிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவகளில் தொடர்புபட்டார்
என்ற சந்தேகத்தில் குறித்த நபர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அதற்கான வழக்கு விசாரணை இடம்பெற்று பிணையில் விடுவிக்கபட்டுள்ள நபருக்கு நேற்று (2) நீதிமன்ற வழக்கு தவனை எனவும்,
இவருக்கு மானிப்பாய், மல்லாகம் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் வழக்குகள் உள்ளதென்றும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குளினை தொடர்ந்து அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தபட்டு நாட்டில் பல பாகங்களில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று யாழ். தலையாழி பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மேற்படி நபர் கைது செய்யபட்டுள்ளார்.