வடக்கில் மாகாணத்தில் கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு – யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்!

ஆசிரியர் - Admin
வடக்கில் மாகாணத்தில் கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு – யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்!

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்கில் 28 ஆம் 29ஆம் 30ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும்.

எதிர்வு கூறப்படும் மழைவீழ்ச்சி 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் ஆக காணப்படுகிறது. ஆகவே வெள்ள மூழ்கடிப்பு நிலை ஏற்படும். சுமார் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

வேகமான காற்றுடன் அதி கூடிய மழை வீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகிறது. ஆகவே வடக்கு மாகாண மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இடர் நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் 1990 என்ற நோயாளர் காவு வண்டி சேவை இலக்கத்துக்கும் அழைத்து சேவைகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு