SuperTopAds

பிரெக்சிட் வெளியேற்றம்! ஒக்டோபர் 31 வரை கால நீடிப்பை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

ஆசிரியர் - Admin
பிரெக்சிட் வெளியேற்றம்! ஒக்டோபர் 31 வரை கால நீடிப்பை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிட் காலக் கெடுவை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடித்துள்ளது ஐரோப்பி ஒன்றியம்.

பெல்ஜியத்தின் தலைநர் பிரசல்ஸ்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா சுமுகமாக வெளியேற, அதிகபட்சம் ஓராண்டு வரை கால அவகாசம் வழங்க விரும்புவதாகப் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறியிருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.