உலகில் அதிக இழப்பீடு கிடைத்த மணமுறிவு!
உலகின் மாபெரும் கோடிஸ்வரரும் Amazon நிறுவனத்தின் தலைவருமான ஜெஃப் பெஸோஸ் தமது மனைவி மெக்கென்சியிடமிருந்து மணமுறிவை பெற்றுக்கொள்கிறார்.
அதற்கான ஒப்பந்தத் தொகையாகக் கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மெக்கென்சியிடம் கொடுக்கிறார் ஜெஃப்.
இதுவே மணமுறிவுக்காக உலகில் கொடுக்கப்படும் அதிகூடிய மணமுறிவு இழப்பீடாகும்.
அத்தோடு Amazon நிறுவனத்தின் பங்குகளில் 25 % பங்குகளும் மெக்கென்சிக்கு சொந்தமாகிறது.
என்னதான் ஜெஃப் பெஸோஸ் மனைவியிடம் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தாலும் அவரே இன்னமும் உலகின் பெரிய பணக்காரராக திகழ்கிறார்.