திருக்கேதீஸ்வரம் மத முரண்பாடு..! துாக்கத்திலிருந்து எழுந்து உளறிய செல்வம், பேசாமல் உற்காருங்கள் நான் தீா்க்கிறேன் என்றாா் மனோகணேசன்.

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரம் மத முரண்பாடு..! துாக்கத்திலிருந்து எழுந்து உளறிய செல்வம், பேசாமல் உற்காருங்கள் நான் தீா்க்கிறேன் என்றாா் மனோகணேசன்.

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்ட சம்பவத்தின் தொடா்ச்சியாக மத முரண்பாடுகள் உருவாக இடமளிக்கப்படாது. என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீா்வு பெற்று தருவேன் என அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02.04.2019) வரவு - செலவு திட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

திருக்கேதிஸ்வரம் மாந்தை பிரச்சினை இப்போது ஒரு அரசியல் மயமாக்கப்பட்ட, இரு சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய நிலைமையில் உள்ளது. ஒரே இனமாக தமிழினம், தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பகுதியாக எமது பகுதிகள் இருந்தது.

எனினும் இப்போது முரண்பாடுகளை ஏற்படுத்துவதை  நாம் அனுமதிக்க முடியாது, இதனை வைத்து அரசியல் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கவும் இடமளிக்க முடியாது. ஆகவே, உடனடியாக குருக்கள், பங்குத்தந்தையர் மற்றும் முக்கியமான நபர்களை அழைத்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணவேண்டும்.

இயேசுநாதராக இருந்தாலும் சிவபெருமானாக இருந்தாலும் இருவரம் மக்களின் பாவங்களை நீத்து மக்களுக்கு புண்ணியமளித்தவர்கள் என இரண்டு தரப்பும் நம்புகின்றனர். மக்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டு மக்களை காப்பற்றுகின்றனர். 

கடவுள் மக்களிடம் எதிர்பார்ப்பது மனித நேயம் மட்டுமேயாகும். ஆகவே  இந்த விடயத்தில் சமயங்கள் சமூகத்தை பிளவுபடுத்திவிடக்கூடாது. எம்மை வழிநடத்தும்   ஒரு பங்கு சமயத்திற்கு உண்டு.  அதேபோல் இந்த சம்பவத்தில் ஒரு பங்குத்தந்தை தொடர்புப்படுத்தப்பட்டுள்ளார். 

ஆனால் அவர் அதில் தொடர்பு இல்லாதவர். அந்த குழப்பத்தை பார்க்க போனவர் மட்டுமே. ஆகவே ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் நாம் அனைவரும் இணைந்து இந்த பிரச்சினையை தீர்ப்போம் என்றார். 

இதன்போது  பதில் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன்,  தமிழ் மக்களை மத அடிப்படையில் பிரித்து அரசியல் செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன். இந்த விடுமுறை காலத்தில் நான் அங்கு வருவேன், தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு