SuperTopAds

தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்திக்க மறுத்த ஜனாதிபதி, அவமானப்பட்டும் மீண்டும் சந்திக்கபோகிறது கூட்டமைப்பு.

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்திக்க மறுத்த ஜனாதிபதி, அவமானப்பட்டும் மீண்டும் சந்திக்கபோகிறது கூட்டமைப்பு.

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவை சந்திப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுத்திருந்த கோாிக்கையினை ஜனாதிபதி மறுத்துள்ளதுடன், சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்காமல் தட்டிக் கழித்துள்ளாா். 

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பா­க­வும், சம­கால அர­சி­யல் நில­வ­ரம் தொடர்­பா­க­வும் அரச தலை­வரை இன்று (நேற்று) சந்­திக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளோம் என்று கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்கு நேற்று நாடா­ளு­மன்ற உறுப்­ பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆயி­னும் சந்­திப்­புக்­கான நேரத்தை அரச தலை­வர் ஒதுக்­காத கார­ணத்­தால் அந்­தச் சந்­திப்பு நடை­பெ­ற­வில்லை என்று அறி­ய­மு­டிந்­தது.

இன்று மாலை 3 மணி­ய­ள­வில் வடக்கு, கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­கான சிறப்பு அரச தலை­வர் செய­ல­ணிக் கூடு்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­தக் கூட்­டத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் பங்­கேற்­க­வுள்­ளது. 

அந்­தக் கூட்­டத்­தின் பின்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைத் தனித்­துச் சந்­தித்­துப் பேச்சு நடத்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அதே­வேளை, வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பா­கத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் சந்­திப்பு நடை­பெற்­றது.

அதில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை முன்­னேற்­றும் வேலைத் திட்­டங்­க­ளுக்­காக 2 ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா­வைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பில் ஆராயப்பட்டது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.