ஆவா குழுவை அடக்கிவிட்டாா்களாம்..! யாழ்ப்பாண பொலிஸாருக்கு கொழும்பில் கௌரவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஆவா குழுவை அடக்கிவிட்டாா்களாம்..! யாழ்ப்பாண பொலிஸாருக்கு கொழும்பில் கௌரவிப்பு..

யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் வவுனியா பகுதிகளில் மறைந்திருந்த ஆவா குழுவின் உறுப்பினா்கள் என பொலிஸாரே கூறும் இக்ரம் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த பொலிஸ் உத்தியோத்தா்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து 2017ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். 

அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மொகமெட் இக்ரமுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட 4 வழக்குகளைப் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

இந்தக் கைது நடவடிக்கையையின் மூலம் பெரும் வன்முறைகளைத் தடுத்தமையைப் பாராட்டியே இந்த கௌரமளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களின் முன்னாள் பொறுப்பதிகாரிகள், குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு கௌரவமளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு