SuperTopAds

1979ம் ஆண்டு நீாில் மூழ்கிய புத்தா், வறட்சியால் வெளியேவந்தாா். கொத்மலையில் குவியும் மக்கள்.

ஆசிரியர் - Editor I
1979ம் ஆண்டு நீாில் மூழ்கிய புத்தா், வறட்சியால் வெளியேவந்தாா். கொத்மலையில் குவியும் மக்கள்.

கடுமையான வறட்சியினால் கொத்மலை நீா்தேக்கத்தின் நீா்மட்டம் அதிகளவில் குறைந்துள்ள நிலையில் நீாில் மூழ்கியிருந்த வணக்கத்தலங்கள் வெளியே தொிய ஆரம்பித்துள்ளன. 

அண்மைக்காலமாக மலையகத்தில் வறட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியமை யாவரும் அறிந்த ஒன்று. 

இந்நிலையில் தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுவதுடன் அதனை பார்வையிட பொது மக்கள் வருகை தருகின்றனர்.