அரசாங்கத்தின் குடும்பி தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிடியிலா..? ஆம் என்றால் உங்களை விட பொிய முட்டாள் உலகத்தில் இல்லை..

ஆசிரியர் - Editor I
அரசாங்கத்தின் குடும்பி தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிடியிலா..? ஆம் என்றால் உங்களை விட பொிய முட்டாள் உலகத்தில் இல்லை..

ஐ.நா மனித உாிமைகள் ஆணையக கூட்டத் தொடருக்கு பின்னா் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் தொடா்பாக தென்னிலங்கையின் அவதானம் அதிகாித்துள்ளது. 

ஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

அதவது, ஜெனிவா தீர்மானத்தினை நடைமுறை படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு மேலும், கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

அதனை கால அவகாசம் என்று கூறாமல் கண்காணிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வாதிட்டு வருகின்றார்.

எனினும், கால அவகாசமோ கண்காணிப்போ, எதுவாயினும் இலங்கை அரசு வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளி கிடைத்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த கால இடைவெளியில் ஐ.நா வின் கண்காணிப்பில் இருந்தாலும் கூட, அரசாங்கம் கலப்பு விசாரணை பொறிமுறையை உருவாக்க போவது இல்லை. 

அதனை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் கூறியிருந்தார். அதே போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலப்பு விசாரணைக்கு இனிமேல் இடமே இல்லை. 

அதனை தூக்கிப்பிடித்து கொண்டு வரவே முடியாது என்று கூறிவிட்டார். அதற்கு ஒருப்படி மேலே சென்று ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

 வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு விசாரணையை கோருவது தேசத் துரோகம் என்று கூறியிருக்கின்றார்.

ஆக மொத்தம் கலப்பு விசாரணை பொறிமுறை என்ற ஜெனிவா வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் இன்னும் 10 வருட கால அவகாசம் கொடுத்தாலும் செய்து முடிக்க போவது இல்லை. 

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியும். இப்படியான ஒரு நிலையில் தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலப்பு விசாரணை பொறிமுறையை உருவாக்குவதற்கு 

அரசியல் அமைப்பு தடையாக இல்லை என்றும், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அது மாத்திரம் இன்றி கலப்பு விசாரணையை அமைக்கத் தவறினால், சர்வதேச குற்றவியல் நீதி மன்றினை நாடுகின்ற நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். 

அதேபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூட கலப்பு விசாரணை பொறிமுறை உள்ளிட்ட ஜெனிவா தீர்மான பரிந்துரைகளை 

அரசாங்கம் முழுமையாக காலவரம்புக்குட்பட்டு நடைடுறைப்படுத்த வேண்டும் என்றும், அதனை செய்யத்தவறினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் மற்றொருப்புறத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கைகள் பரவலான ஈர்ப்பினை பெற்றிருக்கின்றன.

தமிழ் மக்கள் இதனை எப்படிப்பார்க்கிறார்கள் என்பது ஒரு புறத்தில் இருக்க, மறு புறத்தில் இதனை தேசத்துரோகமாக, 

அரசாங்கத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிமைப்படுத்தி ஆட்டிப்படைப்பதற்கான ஒரு தோற்றப்பாட்டினை தெற்கில் உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச கூட ஒரு பலிவீன அரசாங்கத்தினால் பலமான அரசாங்கத்தினை எடுக்க முடியாது என்றும் பலவீனமான அரசு எடுக்கும் முடிவுகளினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் கூட ஏற்படும் என்றும் எச்சரித்திருந்ததையும் இத்தருணத்தில் நினைவில் கொள்ளலாம்.

தெற்கிலும் ஏனைய தரப்பினரும் பெரும்பான்மை பலமில்லாத ஐ.தே.க அரசாங்கத்தினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 எம்பிக்களை வைத்து கொண்டு தமது தாளத்திற்கு ஆட்டம்போட வைத்துள்ளது என்றே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவர்கள் இருவறும் வெறும் அரசியல் இருப்புக்காக இவ்வாறு கூறுகின்றார்களா? அல்லது உண்மையாகவே எச்சரிக்கின்றார்களா? என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு