SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளின் “எல்லாளன்” பிாிவின் பெயரை பயன்படுத்திய காவலிக்கு நடந்த கதி..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் “எல்லாளன்” பிாிவின் பெயரை பயன்படுத்திய காவலிக்கு நடந்த கதி..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உள்ளக நடவடிக்கை பிாிவுகளில் அதிகம் பேசப்பட்ட எல்லாளன் அமைப்பின் பெயரை பயன்படுத்திய மட்டக்களப்பு ஏறாவூா் பகுதியை சோ்ந்த ரவுடியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காவல்துறைப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து கடந்த சனிக்கிழமை குறித்த நபர் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்ட காவல்துறையினர் அவரை கைது செய்ததுடன் அவரிட்மிருந்து ஒரு கைக்குண்டு, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 10, வாள்கள் 3, 70 மில்லிக் கிராம் ஹரோயின் 

என்பனவற்றை கைப்பற்றியிருந்தனர். கைது செய்யப்பட்டவர் விபுலானந்தா வீதி ஜயங்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகனதாஸ் ஜெகாந்தன் எனவும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் எல்லாளன் படைப் பிரிவு என பொதுமக்களிடம் தெரிவித்து அச்சுறுத்தி வந்த மௌலி என அழைக்கப்படுபவர் எனவும் இவர் காவல்துறையினர் கைது செய்யச் சென்ற வேளை மரங்களில் தாவி தப்பியோடி வந்துள்ளார் எனவும் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் கைது செய்தவரை நேற்று மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.