காபன் பாிசோதனைக்காக அமொிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்பு மாதிாிகள், மன்னாாில் மீட்கப்பட்டவைதானா? கிளம்பும் புதிய சா்ச்சை.
மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்பு எச்சங்களின் கால எல்லை தொடா்பான பல விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், காபன் பாிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடா்பில் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். என முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று முந்தினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மன்னார் புதைகுழி தொடர்பான முழுமையான அறிக்கைகளைப் பார்க்காமல் பதில் கூறுவது எங்களுக்குக் கடினம். இந்தியாவிலிருந்து வந்த தடயவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளைப் பார்த்து அவை கடந்த 50 வருடங்களிலே நடைபெற்ற இறப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கின் றார்.
அவர் கூறிய 50 ஆண்டுகளுக்கும் ஆய்வின் பின்னர் வந்திருக்கும் காபன் அறிக்கையின் 500 ஆண்டுகளுக்கும் இடையில் பலவிதமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கு 50 வருடங்கள் என்று ஒரு விடயத்தைப் பரிசீலித்துக் கொண்டிருக்கும் பொழுது,
அமெரிக்காவுக்கு 500 வருடங்களுக்கு முன்னையதை அனுப்பினால் அவர்கள் 500 வருடங்களாக இருக்கத்தக்கதாகத் தான் அறிக்கையைத் தருவார்கள் என்பது ஒன்று. நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தைப் பார்க்க வேண்டும்.