யாழ்பாண மக்களின் தலையில் மிளகாய் அரைத்த நிதி நிறுவனம், நீங்களும் ஏமாற்றப்பட்டிருக்கலாம், ஏமாற்றப்படலாம் அவதானம்..
இலங்கை மத்திய வங்கியினால் 2013ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட நிதி நிறுவனம் சாவகச்சோி பகுதியில் இயங்கிவந்த நிலையில் 2017ம் ஆண்டு சாவகச்சோி நீதிமன்றினால் தடைசெய்யப்பட்டது.
அதன் பின்னா் அதே நிறுவனம் யாழ்.நகாில் நிறுவனத்தை அமைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தை முடக்குவதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு.
பிரமிட் வியாபாரத்தை ஒத்த வர்த்தக நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் இந்த நிதி நிறுவனம், 2013 ஆம் ஆண்டு மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட நிறுவனம் சிறிது காலத்தில் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் அதன் கிளை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தது.
அந்த நிறுவனத்துக்கு எதி ராக சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் நிறுவனம் இயங்குவதற்கு தடை விதித்திருந்தார்.
தடை விதிக்கப்பட்டதையடுத்து, சாவகச்சேரியில் இயங்கிய கிளை மூடப்பட்டது. இந்த நிலையில் அதே நிறுவனம் தற்போது யாழ். நகரில் தனது கிளையை ஆரம்பித்துள்ளது.
இதனால் இந்தக் கிளையை மூட வேண்டும் என பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு மின் அஞ்சல் மூலம் தகவல் கொண்டு செல்லப்பட்டது. பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மின் அஞ்சல் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டா ளரை அழைத்த பொலிஸ் அத்தியட்சகர் பொது மக்கள் நன்மை கருதி முறைப்பாட்டை பதிவு செய்து ஏமாற்று மோசடி வழக்காக பதிவு செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டார். மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட விவரம், சாவகச்சேரி நீதிமன்றால் தடை செய்யப்பட்ட விவரங்களின் பிரதிகளையும் பெற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் முறைப்பாட்டாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது: நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் நீதிவான் அன்றி அவர் ஓர் நீதிபதியாவார். அவரது உத்தரவு மாவட்டம் முழுமையாக செல்லுபடியானதாகவே கருத முடியும்.
அதனை உறுதி செய்யவும் இவ்வாறான மோசடியை தடுக்கும் வகையிலும் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த முறைப் பாட்டாளர், நிறுவனத்துக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவுகள் தொடர்பான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.