SuperTopAds

எடுக்கிற களவும், வாங்கிற லஞ்சமும் தொிந்துவிடும், ஊடகங்களை கண்டு அஞ்சும் பருத்துறை நகரசபை உறுப்பினா்கள் சிலா்..

ஆசிரியர் - Editor I
எடுக்கிற களவும், வாங்கிற லஞ்சமும் தொிந்துவிடும், ஊடகங்களை கண்டு அஞ்சும் பருத்துறை நகரசபை உறுப்பினா்கள் சிலா்..

பருத்தித்துறை நகரசபையில் செய்தி சேகரிக்கச் ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்திய கையாலாகாத உறுப்பினர்கள்.

நேற்றயதினம் பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற சந்தை தொடர்பில் விசேட கலந்துரையாடலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு செய்தி சேகரிக்க மறுத்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மரக்கறி சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்த்தை தொடர்ந்து சந்தை விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் காலை பத்துமணியளவில் நகரசபை மண்டபத்தில் 

அவசர கலந்துரையாடல் கூட்டமொன்று நகரசபை உறுப்பினர்களுக்கு இடம்பெற தயாராக இருந்தது இதன்பொழுது மண்டபத்திற்கு 9.55 மணியளவில் சென்ற ஊடகவியலாளர்கள் தவிசாளரிடம் சென்று ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இருக்கின்றதா என சபை உறுப்பினர்களும் இருக்கத்தக்க வினவினர். 

இதற்கு பதிலளித்த தவிசாளர் ஜே.இருதயராஜா ஆம் தாராளமாக இருந்து செய்தி சேகரிக்கமுடியும் என்று கூறினார் இதனால் 10.00 மணியளவில் ஊடகவியலாளர்கள் சபையில் இருந்தனர். 

ஐந்து நிமிடங்களின் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தயாபரன் இதில் பலரும் முரண்பட்ட  பலகருத்துக்களை கதைக்கவேண்டிவரும் ஆகையால் கலந்துரையாடியபின் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாம் என்றார். 

அதன்பின் சலசலப்பு ஏற்படவே உறுப்பினர்களுக்குள் இது தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்படவே இறுதியாக ஊடகங்களை அனுமதிப்பதா இல்லையா என்று வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

றுதியாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டபொழுது உறுப்பினர்களான  ந.நிரஞ்சன்தமிழர்விடுதலைக்கூட்டணி ,மு.சுலோயனா, கேடயம்,க.பாமதி கூட்டமைப்பு ,சி.தயாபரன் கூட்டமைப்பு ,சிறி வாணி ஈ.பி,டி,பி ஆகிய ஐவர் அனுமதிப்பதில்லை என வாக்களித்தனர். 

ஊடகவியலாளர்கள் அனுமதிப்பதால் தமக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லையென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான சு.கோகிலகுமார் ,க.பாலசுப்பிரமணியம் ,பி.வின்சர்ன் டிப்போல் .சு.கமலன் ஆகியோரென நால்வர் வாக்களித்தனர்.

இதேவேளை இருப்பதால் தனக்கு பிரச்சனை இல்லை என்றும் எனினும் தான நடுநிலை வகிப்பதாக EPDP மு.பிறேம்குமார் நடுநிலைவகித்தார் இதனால் ஐந்துக்கு நான்கு என்ற கணக்கில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கபடுவதில்லை என தோற்கடிக்கப்பட்டு 10.15 மணியளவில் வெளியேற்றப்பட்டனர்.  

இதேவேளை ஆளுங்கட்சியான  உபதவிசாளர் மதனி தொடர்பான ஊழல்தொடர்பான விசேட கூட்டம் 01.17.2019 இடம்பெற்றபொழுது ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ள  அனுமதிக்கப்பட்டதும். இதே வேளை இதேபொன்றதொரு மரக்கறி வியாபாரிகள் சந்தை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வியாபாரிகள் நகரசபை உறுப்பினர்களுடைய  அவசர கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.