இலங்கை மக்களுக்கு எச்சாிக்கை..! 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை சூாிய கதிவீச்சு நேரடியாக தாக்குமாம்.

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களுக்கு எச்சாிக்கை..! 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை சூாிய கதிவீச்சு நேரடியாக தாக்குமாம்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையில் சூாிய கதிா்வீச்சின் தாக்கம் நேரடியாக உணரப்படும். இதனால் இரவி லும், பகலிலும் கடுமையான வெப்பம் நிலவும். என காலநிலை அவதா ன நிலையம் எச்சாித்துள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். எனவே, பொது மக்கள் வெப்பநிலையின் தாக்கத் திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்

கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மாகாணத்தின் திக்வெல்ல, கெகனதுரு, கொட்டவில முதலான பிரதேசங்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. 

இதேநேரம், வட மாகாணத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி சூரிய கதிர் வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. தற்போது நிலவும் கால நிலை தன்மைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக 

காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குருநாகலின் வெப்பநிலை சாதாரணமாக 32 பாகை செல்சியஸாக பதிவாகின்ற நிலையில், தற்போது 38.8 பாகை செல்சியஸ் அளவில் அங்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அதிகளவில் நீரை அருந்துவதுடன், 

அதிகளவான நேரத்தை குளிப்பதற்கு செலவிடுவதன் ஊடாக சரும நோ ய் ளை மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா தொிவித்து ள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு