மதத்தின் பெயரால் பலாத்காரம் செய்வது சட்டவிரோதமானது ஆளுநா், உண்மை உளறிவிட்டாா் ஆளுநா்.
5 கிராமங்களில் நடக்கும் மத முரண்பாடுகளை ஊடகங்கள் பாாிய பிரச் சினையாக காண்பிக்க முயற்சிக்கின்றன. ஆனால் எந்த மதமாக இருந் தாலும் மற்றய மதங்கள் மீது திணிப்பு முயற்சியை செய்வது தவறானது என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.
வவுனியா சிறி போதிதக்சினராமாய விகாரதிபதி சங்கைக்குரிய சியம் பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டபின் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் மூவாயிரத்து 884 கிராமங்கள் இருக்கின்றன. இதில் 5 கிராமங்களில் மத முரண்பாடு ஏற்பட்டிருந்தது. போருக்கு பின்னர் பெ ண் தலைமைத்துவங்களைக் கொண்டதாகவும், சமாதானமானதாகவும் பல கிராமங்கள் இருக்கும் போது ஊடகம் அதைப் பற்றி
ஒன்றுமே சொல்லாது. ஆனால் அந்த 5 கிராமங்களின் பிரச்சனையை தான் ஊடகம் எழுதுகிறது. அது கவலையான விடயம். பௌத்த மதமோ, இந்து மதமோ, இஸ்லாம் மதமோ அல்லது கிறிஸ்தவ மதமோ எந்தவொரு மதமும் இன்னொருவர் மேல் திணிப்பது அந்த மதத்திற்கும் விரோதம்.
சட்டத்திற்கும் விரோதம். ஆகவே பலாத்காரமாக யாரையும் இன்னொரு மதத்திற்கு திருப்புவது சட்டவிரோதமானது. அதேநேரம் அது நாகரீகமற்றது. மதத்தை தழுவிக் கொள்ள வேண்டுமே தவிர, மதத்தை நாங்கள் திணிக்கக் கூடாது.
அண்மையில் நான்கு இடங்களில் மத ரீதியான பிரச்சினை நடந்தது. அரச நீதி என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. மன்னாரில் கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை,
நாயாற்றில் ஏற்பட்ட பிரச்சனை என்பன தொடர்பாக நீதிமன்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நீதித்துறை என்ன சொல்கிறதோ அதை செவ்வனே நடைமுறைப்படுத்த நான் தயாராகவுள்ளேன்.
நீதிக்கு கீழாகவோ, நீதிக்கு மேலாகவோ என்னால் போக முடியாது. நான் ஒரு ஆன்மீகவாதியாக இருக்கின்றேன். ஆகவே மதத்தின் ரீதியாக யாரும் மதமடையாக்கூடாது என்பது தான் எனது கருத்து எனத் தெரிவித்தார்.