நாங்கள் கொடுத்த ஆவணங்கள் எங்கே? ஒளித்து விட்டீா்களா? குப்பை தொட்டியில் போட்டுவிட்டீா்களா?

ஆசிரியர் - Editor I
நாங்கள் கொடுத்த ஆவணங்கள் எங்கே? ஒளித்து விட்டீா்களா? குப்பை தொட்டியில் போட்டுவிட்டீா்களா?

வடக்கு ஆளுநாிடம் பகிரங்கமாக கேட்பது ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு எங்களால் வழங்கிய முன் னாள் வடமாகாண சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்துமா று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கே ட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது

ஆளுநரின் வேண்டுகோளின் படி கௌரவ ஆளுநரின் செயலாளரினால் வடமாகாணத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண சபையினுடைய முன்னாள் உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள் கடிதம் மூலம் பதிவுதபால் மூலம் விடுக்கப்பட்டிருந்தது.

உங்களின் வேண்டுகோளின் அடிப்படையிலே நாங்கள் வழங்கிய இரண்டு தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை தயவு செய்து ஊடகங்கள் வாயிலாக அறியத் தாருங்கள் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிக்கவில்லை 

உங்கள் கையில் இருக்கின்றன என்றால் அதனை தெரியப்படுத்துங்கள். குப்பைத் தொட்டியில் தான் போட்டீர்கள் என்றால் அதையும் சொல்லுங்கள. அல்லது என்ன செய்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு உங்களது யோசனைகள் இருந்தால் அதை ஒப்படையுங்கள் என்று நீங்கள் கூறிய அந்த அடிப்படையிலேயே நாங்கள் 3பேர் முன்னாள் மாகாண சபையினுடைய முன்னாள் 

அமைச்சர் அனந்தி சசிதரன் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் நான் ஆகிய மூவரும் சேர்ந்து ஒப்படைந்திருந்தோம்.  2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வடக்கு மாகாண சபையிலே ஏகமனதாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரனால்

 கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தினுடைய பிரதியையும் அதைப் போல 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி மாகாண சபை முடிவடைவதற்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது அந்த தீர்மானத்தினுடைய பிரதியையும் சர்வதேச குற்றவியல் 

நீதிமன்றத்துக்கு அல்லாவிட்டால் ஒரு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அதேபோல அரசியல் தீர்வு இல்லை காரணத்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலே ஜக்கிய நாடுகள் சபையினுடைய மேற்பார்வையிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் 

என்ற கோரிக்கைகள் அடங்கிய அந்த தீர்மானத்தையே கையளித்திருந்தோம். ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடைய 40 ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்திருக்கிறது. இதன் பின்னர் இலங்கை அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கி 5 இணைத்தலைமை 

நாடுகள் உட்பட 36 நாடுகள் கொண்டு வந்த பிரேரணைக்கு 37 ஆவது நாடாக இலங்கை இணைஅனுசரணை வழங்கியிருக்கிற சூழ்நிலையிலே இணைஅனுசரணை வழங்கியது தனக்குத் தெரியாது என்று மேதகு ஜனாதிபதி  அது போல ஜனாதிபதிகளுடைய 

பிரதிநிதிகளாகச் சென்ற கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களும் அதைப் போல பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுலுகம அவர்களும் சென்றிருந்த பொழுதிலும் ஜனாதிபதி இவ்வாறு கூறுவதும் அதைத் தொடர்ந்து  

ஆளுநர் தெரிவித்த கருத்துக்களும் உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச அரங்குகளிலும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு