“கோத்தை படும் பாட்டில் குத்தியன் எதுக்கோ அழுதானாம்..” என்பதுபோல் உள்ளது ஆளுநாின் செயற்பாடு.
வடமாகாணத்தில் செய்யவேண்டிய பல விடயங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில் பௌத்த மாநாட்டை முதல்வேலையாக செய்துள்ளமை சகிக்க முடியாத ஒரு விடயமாகும். என வடமாகாணசபையின் முன்னாள் எதிா்க்கட்சி தலைவா் சி.தவராசா கூறியுள்ளாா்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணசபை இயங்கிய ஐந்து வருட காலப்ப குதிக்குள் மக்களின் பிரச்சினைகள் தீர்வுகாண முடியாத அளவுக்கு தீர்க்கப்படாமல் இருக்கின்றது.
எனினும் வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தமிழ் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படாதவற்றை நிறைவு செய்வார் என பெரிதும் எதிர்பார்த்தோம்.
எனினும் அவர் பதவியேற்றதன் பின்னர் பௌத்த மாநாட்டுக்கு முன்னுரிமை அளித்த விடயமானது எமக்கு வருத்தத்தை அளிப்பதோடு இந்த விடயம் தொடர்பாக எனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.