மன்னாா் வளைகுடாவில் 2 எாிவாயு படிமங்கள் கண்டுபிடிப்பு, 9 ட்றில்லியன் எாிவாயு உள்ளதாம்..

ஆசிரியர் - Editor I
மன்னாா் வளைகுடாவில் 2 எாிவாயு படிமங்கள் கண்டுபிடிப்பு, 9 ட்றில்லியன் எாிவாயு உள்ளதாம்..

மன்னாா் வளகுடா பகுதியில் பெற்றோலிய கனிய எண்ணெய் வளம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெற்றிகரமான பெறுபேற்றை கொடுத்துள்ளதாக, எண்ணெய் வள அவிருத்தி அமைச்சா் ஹபீா் ஹாசிம் கூறியுள்ளாா். 

மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பீப்பாய் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான தேனாடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். 

இதன் மூலம், 300 மெகாவாட் மின் நிலையத்தை 10 ஆண்டுகளுக்கு இ டைவிடாமல் இயக்க முடியும். இரண்டாவது எரிவாயுப் படிமத்தில், 1000 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இயற்கை கனிய வளத்தை அகழ்ந்து எடுப்பதற்கான நிறுவனங்களிடம் இருந்து விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன் மே மாதம் அதனை இறுதி செய்ய உள்ளோம். 12 நிறுவனங்கள் விலை மனுக்களை வழங்கியுள்ளன.

2020ஆம் ஆண்டில் உற்பத்திகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் எண்ணெய் கிணறுகளை அமைக்க முடியும். இயற்கை எரிவாயுவை முதலில் மின் உற்பத்திக்கும், பின்னர் போக்குவரத்து மற்றும் வீட்டுக்கு தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு