SuperTopAds

இறுதி போருக்குள் மருத்துவ வசதி இல்லாமையாலேயே என் அப்பா இறந்தாா், மருத்துவா் ஆவதே என் கனவு..

ஆசிரியர் - Editor I
இறுதி போருக்குள் மருத்துவ வசதி இல்லாமையாலேயே என் அப்பா இறந்தாா், மருத்துவா் ஆவதே என் கனவு..

கடந்தகால இறுதி யுத்தத்தின்போது சரியான முறையில் வைத்திய சேவைகள் இடம்பெறவில்ல. எனவே எனது தந்தை உட்பட, அதிகமான மக்கள் உயிரிழந்னர். 

இனி அவ்வாறன இழப்புக்களை சந்திக்கக்கூடாதென இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A சித்தி பெற்ற முல்லைத்தீவு -  வித்தியானந்த கல்லூரி மாணவி கிருஸ்ணகுமார் - ஜானுசா தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் தான் வைத்தியராகி முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சேவைசெய்வதே தனது இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எனக்கு 9A சித்திபெற்றதில் மிகவும் சந்தோசமாகவுள்ளது. நான் இப்படி சித்தியடைவதற்கு என்னுடைய குடும்பம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், 

அதைவிட தமிழ்த்தாய் தனியார் கல்விநிலைய ஆசிரியர்களும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். மேலும் ஆசிரியர்கள் மாதங்கள்தோறும் பரீட்சைகள் வைத்தார்கள். 

அதையும்தாண்டி படிப்பதற்கு இலகுவான வழிவகைகளையும், ஆலோசனைகளையும் சொல்லித்தந்தார்கள். ஆசிரியர்களுடைய உந்துதலினாலேயும் என்னுடைய கடின உழைப்பினாலும்தான் என்னால் இவ்வாறு சித்தியடைய முடிந்தது.

வீட்டிலே என்னுடைய அம்மா எனக்கு நிறைய உதவிகள் புரிவார். நான் இரவுநேரங்களில் படிக்கும்போது தானும் தூங்காது எனக்கு வேண்டிய உதவிகளையும் செய்துதருவார். 

கடந்தகால யுத்தத்தில் நான் சிறியவளாக இருக்கும்போதே எனது தந்தை இறந்துவிட்டார்.

இருந்தாலும் அம்மா மிகுந்த இன்லுக்கு மத்தியிலும், எனக்கு அப்பா இல்லை என்ற குறையே வைக்காமல் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து தருவார்.

எமது சமூகத்தின் வலிகளை நான் நன்கு அறிவேன். கடந்தகால யுத்தத்தின்போது சரியான வைத்திய சேவைகளைப் பெறமுடியாத நிலையில்தான் நிறைய மக்களை நாம் இழந்திருக்கின்றோம்.

என்னுடைய அப்பாவையும் நான் இழந்திருக்கின்றேன். அந்த இழப்புகளை இனியும் நாம் சந்திக்கக்கூடாது. எனவே நான் ஒரு சிறந்த வைத்தியராக வந்து எமது முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு 

மருத்துவ சேவை செய்வதற்கு ஆசைப்படுகின்றேன். அதற்காக நான் மேலும் என்னுடைய படிப்பை சிறந்தமுறையில் கொண்டுசெல்ல முயற்சிப்பேன் என்றார்.