நீதிமன்றம் சென்றால் எனக்கு கலியாணம் நடக்காது, நான் நீதிமன்றம் போகமாட்டேன். மாநகரசபைக்கு வந்த சோதனை..
சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தனக்கு தி ருமணம் நடக்காது என கூறும் தொழிநுட்ப அலுவலா் ஒருவாினால் யாழ். மாநகரசபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டிடங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக கூறப்படுகின்றது.
முறைகேடாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வ ழக்குகளைத் தாக்கல் செய்வது தனது திருமணத்தைப் பாதிக்கும் என்று குறித்த தொழில்நுட்ப அலுவலர் கூறுவதால் சட்டத்துக்கு மாறான கட்ட டங்களை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை
என்று யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். யாழ்ப் பாண நகரில் ஒரு வீதியைக் காணவில்லை என்கிற விவகாரத்தை மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயாளன் சபையில் முன்வைத்தபோது எழு ந்த விவாதத்திலேயே முறைகேடான கட்டடங்களை
அகற்றுவதற்கும் கட்டுபடுத்துவதற்கும் உள்ள இந்த விநோதமான தடை பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலத்துக்கு வந்தன. ‘‘நகரின் மத்தியில் காங்கேசன்துறை வீதியில் இருந்து ஜூம்மா பள்ளிவாசல் வீதிக்குச் செல்லும் இணைப்பு வீதியை இப்போது காணவில்லை.
மின்சார நிலைய வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அந்த வீதியை ஆக்கிரமித்து வைத்துள்ளது. மாநகர சபைக்குரிய அந்த வீதியை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?’’ என்றார் உறுப்பி னர். இதையடுத்து நகரத்துக்குள் சட்டத்துக்குப் புறம்பாக
எழுப்பப்படும் கட்டுமானங்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
சபைக்குரிய ஆவணம் எங்கே?
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் 500க்கும் மேற்பட்ட முறைகேடான கட்டடங்கள் அமைக்கப்படும் நிலையில், வெறும் 40 கட் டடங்கள் தொடர்பில்தான் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ப தும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
பொது மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றதே தவிர, பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது .
முறையற்ற கட்டுமானங்கள் மீது வழக்குத் தொடுப்பது சபையின் தொ ழில்நுட்ப அலுவலரின் பணி, ஆனால், முறையற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்தாலும் அவர் நடவடிக்கை எடுக்க முன்வருகிறார் இல்லை
என்று இதற்குப் பதிலளித்தார் பொறியியலாளர் வரதன். மேலதிகாரி யான பொறியியலாளர் இட்ட பணியை நிறைவேற்ற மாட்டேன் எனத் தெரிவிக்கும் தொழில் நுட்ப அலுவலர் இந்தச் சபைக்கு தேவைதானா? என்று உடனே கேள்வியெழுப்பினார் உறுப்பினர் லோகதயாளன்.
நீதிமன்று சென்றால் பெண் கிடைக்காது!
இதற்குப் பதிலளித்த மாநகர முதல்வர் ஆனல்ட், ‘‘தொழில்நுட்ப அலுவ லர் வழக்குப் போடமாட்டேன் என்பதற்கான காரணத்தை என்னிடமும் ஆணையாளரிடமும் கூறிய போது வியப்படைந்தோம்’’ என்றார். ‘‘தான் திருமணம் செய்யாதவர் எனவும் வழக்குத் தாக்கல் செய்தால்
அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலமை ஏற்படும் என்றும் அவ் வாறு நீதிமன்றுக்குச் சென்று வந்தால் மணம் முடிக்க பெண் கிடைக் காது போய்விடும் என்றும் தொழில்நுட்ப அலுவலர் தம்மிடம் தெரிவித் தார்’’ என்றார் மாநகர பிதா.
இதனையடுத்து, குறித்த தொழில்நுட்ப அலுவலருக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபையின் சட்டத்தரணி ஊடாக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சட்டத்தரணியும் தவறிழைக்கிறார்!
சபையின் சட்டத்தரணியே அனுமதி பெறாது பருத்தித்துறை வீதியில் கட்டடம் ஒன்றை எழுப்பிவரும்போது எப்படி அவர் முறைகேடான கட் டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்று கேள்வி எழுப்பினார் உறுப்பினர் தே.தனுஜன்.
சட்டத்தரணி மட்டுமல் சபையின் இரு உறுப்பினர்களேகூட முறைகேடா கத்தான் கட்டடங்களை அமைத்து வருகிறார்கள் என்றும் சபையில் சுட் டிக்காட்டப்பட்டது. காரசாரமான இந்த விவாதங்க ளின் பின்னரும் இது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை
என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.