திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம், மத வன்முறையை துாண்டல், மத இழிவுபடுத்தல் குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவை உடைத்து சேதப்ப டுத்திய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த பொலிஸாா் வன்முறையா ளா்களை பாதுகாக்கும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளமை அம்பல ப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதன்படி சாதாரண சொத்து அழிவு வழக்காக திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் இடம்பெற்ற சம்பவத்தை பொலிஸாா் சித்தாிக்க முயற்சித்த நி லையில் அது தவறானது மத வன்முறையை துாண்டும், மத தலங்களை இழிவுபடுத்தல் போன்ற குற்றங்களில்
வழக்கு பதியப்படவேண்டும். என சட்டத்தரணிகள் வாதாடிய நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட மன்று அறிக்கையை திருத்தி தாக்கல் செய்யு மாறு பொலிஸாரை பணித்துள்ளது. திருக்கேதீச்சர ஆலய அலங்கார வ ளைவு, மகா சிவராத்திரிக்கு முதல் நாள் கத்தோலிக்க மக்களால்
அகற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது. காணொலி ஆதாரங்கள், ஒளிப்பட ஆதாரங்க ளைப் பயன்படுத்தி சந்தேகநபர்களைக் கைது செய்ய மன்று கடந்த 8ஆம் திகதி பணித்திருந்தது. பொலிஸார் கைது செய்யவில்லை.
கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் அருட்தந் தையர் ஒருவர் உள்ளிட்ட 10பேர் பொலிஸில் சரணடைந்தனர். பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். பிணையில் விடுவிக் கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கு
மன்னார் நீதிமன்றில் நீதிபதி சரவணராஜா முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளர்களின் சட்டத்தரணிகள் மன்றில் தமது வாதங்களை முன்வைத்தனர். திருக்கேதீச்சர ஆலய அலங்கார வளைவு உடைக்கப்பட்டு,
நந்திக் கொடியை காலால் மிதித்த செயல், ஒரு மதத்தை அவமதிப்பது போன்றது. இரண்டு மதங்களுக்கு இடையிலான பகைமையை தோற்று விக்கும் செயல். குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக தகுந்த ஒளிப்பட, காணொலி ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார்
வழக்கு அறிக்கையில் அவற்றைச் சேர்க்கவில்லை. சாதாரண சொத்து அழிவு வழக்குப் போலவே பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில், வழக்கில் ஆதாரமாக காணொ லி ஆதாரங்களைக் கொண்டு மத வன்முறையை தூண்டுதல்,
மதத் தலங்களை அழித்தல், மதங்களை இழிவுபடுத்தல் ஆகிய சட்டங்க ளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முறைப்பாட்டாளர்களின் சட் டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்,
உரிய பிரிவுகளில் வழக்குகளைத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டது. வழக்கு ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான, அரச தலைவர் சட்டத்தரணி திருமதி சாந்தா அபிமன்னசிங்கம்,
கணேசராஜா, இராஜகுலேந்திரா, இளங்குமரன், செல்வி புராதணி சிவ லிங்கம், திருமதி விதுர் சுபா, தர்மராஜ் வினோதன், ராகுல் சிறிரங்கநா தன், கதிரமலை ஜெயகாந்தன், இரவீந்திரநாதன் கீர்த்தனா, செல்வரா டினேசன், நடனசபாபதி அனிஸ் ஆகியோரும்,
எதிராளிகள் சார்பில் அன்ரன் புனிதநாயகம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா, பா.டெனீஸ்வரன் மற் றும் யோன்தாஸ் துஷாத், ஜெபநேசன் லோகு, அர்ஜின் போன்றோரும் முன்னிலையாகியிருந்தனர்.