கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுமதிமிக்க இயற்கை வளத்தை தாரைவாா்க்க முயற்சி..!சளாப்புகிறாா் மாவட்டச் செயலா்..
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உப்பளங்களை தனியாருக்கு தாரைவாா் க்க சிலா் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், மேற்படி விடயம் கு றித்து ஒருங்கிணைப்பு குழுவின் தீா்மானத்திற்கமைய முடிவுகள் எட்டப் படும் என மாவட்ட செயலா் சு.அருமைநாயகம் கூறியுள்ளாா்.
தென்னிலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு உப்பளம் அமைப் பதற்காக கிளிநொச்சி பகுதியில் நூறு ஏக்கர் நிலத்தை வழங்கு வதற்கு நடவடிக்கைகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றன என் றும், இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது என்றும், இணையத் தளங்களில் நேற்று செய்திகள் பரவின. வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத பிரதேசத்தை வனவளத் திணைக்களம் தங்களுடையது என பிரகடனம் செய்துவிட்டு அதனை வழங்குவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியிருந் தன. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் நீண்ட கால மாக வசித்து வருகின்ற காணிகள், கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதா னங்கள், குளங்கள் ஜெயபுரம் பிரசேத்தில்
மக்களின் வயற்கா ணிகள் என்பவற்றை வனவளத் திணைக்களம் தங் களுடையது என்றும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் உறு தியான நிலைப்பாட்டில் இருக்கும் போது இந்த விடயத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள் ளது என்றும் இணையத்தளங்கள் செய்திவெளியிட்டிருந் தன. அந்தத் தகவலை கிளிநொச்சி மாவட்டச் செயலர் மறுத்தார். அது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, கிளிநொச்சியில் உப்பளம் அமைக் க சில நிறுவனங்கள் அனுமதிகளைக் கோரியுள்ளன.
கிளிநொச்சிக்கு வரும் முதலீடுகளை நாங்கள் வரவேற்கவேண்டும். கொழும்பு, திருகோணமலை மாவட்டங்களில் ஏராளமான நிறுவனங் கள் முதலீடுகளை மேற்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி அந்த மாவட் டத்தை அபிவிருத்திநோக்கி தள்ளுகின்றன.
ஆனால் யாரும் கிளிநொச்சிக்கு வருகின்றார்கள் இல்லை. வருபவர்க ளையும் விடுகிறார்கள் இல்லை. உப்பளம் அமைப் பதற்கு கேட்கப்பட்ட இடம் காட்டுப் பிரதேசம், அது வனவளத் திணைக்களத்துக்குச் சொந்த மானது. அவர்களை அழைத்து அதுதொடர்பிலேயே
நேற்று கலந்துரையாடப்பட்டது. ஒரு நிறுவனத்துக்கு காணி வழங்க வேண்டுமானால் அதற்கென ஒரு நடைமுறை உள்ளது. மாவட்டச் செய லகத்தில் உள்ள தொழில் நுட்பக் குழுவில் அந்த விடையத்தைப் பற்றி ஆராய வேண்டும்,
அடுத்து தேசிய ரீதியில் உள்ள தொழில் நுட்பக் குழு வில் ஆராய வேண் டும், அடுத்த படியாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அதை பாரப் படுத்தவேண்டும். இவ்வாறு நடைமுறைகள் இருக்கும்போது காணியை கொடுப்பதற்கு இரகசியமாக கலந்துரையாடல் என்பதும்,
இரகசிய நடவடிக்கை என்பதும் வேடிக்கையானது. மாவட்டச் செயலர் கள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது எனவே அதில் இந்த விடையங்க ளைத் தெளிவு படுத்துவதற்காகவே அந்தக் கலந்துரையா டல் இடம்பெற்றது என்றார்.