ஆளுநருக்கு நீதிமன்றம் அழைப்பாணை, நாட்டாமை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியது யாா் சிறீகாந்தா வாதம்..

ஆசிரியர் - Editor I
ஆளுநருக்கு நீதிமன்றம் அழைப்பாணை, நாட்டாமை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியது யாா் சிறீகாந்தா வாதம்..

கிளிநொச்சி நகாில் உள்ள உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவினையும் மீறி திறந்திருந்த நிலையில் அதனை மூடுவதற்கு முயற்சித்தமை தொடா்பில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை எதிா்வரும் 5ம் திகதி நீதிமன்றில் ஆஜயராகுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிம ன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

“நீதிமன்றின் கட்டளையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றப் பதிவாளர் அல்லது நீதிமன்ற கட்டளைச் சேவகர் மற்றும் பொலிஸாருக்கே உண்டு. ஆனால் நீதிமன் றக் கட்டளையைக் காரணம் காட்டி நாட்டாமை வேலை பார்க்க மாகாண ஆளுநருக்கோ அல்லது வேறு அரச அதிகாரிக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே நீதிமன்றக் கட்டளையைப் பயன்படுத்தி அதிகார மீறலில் ஈடுபட்ட மாகாண ஆளு நரின் மீது நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி எ ன்.சிறிகாந்தா மன்றுரைத்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்ற கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா, 

மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வரும் 5ஆம் திகதி மன்றில் முன்னிலையா குமாறு அழைப்பாணை அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.மேலும் சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை முழுமையாக 

நடைமுறைப்படுத்தி உரிய திருத்தப்பணிகளை முடிவுறுத்தி வரும் முதலாம் திகதி மன் றில் அறிவிக்குமாறு உணவக உரிமையாளருக்கு மன்று உத்தரவிட்டது. கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மக்கள் சந்திப்பு ஒன்றிணை நடாத்திய வடமாகாண ஆளுநருக்கும் மாகாண திணைக்களங்களின் அதிகாாிகளுக்கும்

 கிளிநொச்சியில் உள்ள பாரதி உணவகத்திலிருந்து மதிய உணவு கொள்வனவு செய்யப்ப ட்டிருந்த்து.அந்த உணவு பாசல்களில் புழுக்கள் கிடந்தமையினையடுத்து அந்த விடயம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஊடாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

நீதிமன்றினால் உடனடியாக உணவகத்தை மூடுமாறு அன்றைய தினமே கட்டளையிடப் பட்டது.இந்நிலையில் அன்று இரவு 8 மணியளவில் அந்த பகுதி ஊடாக பயணித்த ஆளுநா் கலாநிதி சுரேன் ராகவன், உணவகம் திறந்துள்ளமையினை நோில் அவதானித்துள்ளாா். இதனையடுத்து ஆளுநா் உணவகத்திற்குள் புகுந்து சோதனை நடத்தியுள்ளாா். 

அத்துடன், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என உணவக முகாமையா ளரை எச்சரித்தார்.இதனையடுத்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநா் கலாநிதி சுரேன் ராகவன், மாலை 4 மணிக்கு உணவகத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் இரவு 8 மணிவரையில் உணவகம் பூட்டப்படவில்லை. 

அதனை நான் நோில் பாா்த்துள்ளேன். இந்நிலையில் நானே நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றின் உத்தரவை மீறியமைக்காக அந்த உணவகத்தின் மீது சட்டநடவடிக்கை எடுப்பேன். மேலும் பொறுப்புவாய்ந்த அதிகாாிகள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.இந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றில் உணவுக்கு எதிரான

வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. உணவகத்தின் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, சட்டத்தரணி தில்லைநாதன் அர்ஜூனா உள்ளிட்ட ஐவர் முன்னிலையாகி, ஆளுநரின் செயற்பாடு அதிகாரத்தை மீறிய செயல் என மன்றுரைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு