SuperTopAds

என்ன செய்யபோகிறீா்கள்..? விாிவுபடுத்தப்படுகிறது ஊற்றுக்குளம் சிங்கள குடியேற்றம்..

ஆசிரியர் - Editor I
என்ன செய்யபோகிறீா்கள்..? விாிவுபடுத்தப்படுகிறது ஊற்றுக்குளம் சிங்கள குடியேற்றம்..

வவுனியா வடக்கு - ஊற்றுக்குளம், கச்சல் சமளங்குளம் இடையில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்ற மு யற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு தொடா்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுவதுடன், 

அங்குள்ள விகாரை விாிவுபடுத்தப்பட்டு குடியேற்றப்படும் சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனை தாம் நோில் பாா்த்துள்ளதாகவும் மக்கள் கூறியுள்ளனா். 

ஊற்றுக்குளம் கிராமம், கச்சல் சமளங்குளம் கிராமங்கள் இடைணயில் பெருமெடுப்பில் காடுகள் அழிக்கப் பட்டு சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

இதனை வவவுனியா வடக்கு பிரதேசசபை அம்பலப்டுத்திய நிலையில், சிறிது காலம் அந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து மேற்படி குடியேற்ற முயற்சியின் வேகம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், 

சில தினங்களுக்கு முன்னா் குடியேற்ற பகுதிகளுக்கு சென்ற தமிழ் மக்கள் அங்கு இடம்பெற்றுக் கொண் டிருக்கும் சம்பவங்களை தற்போது அம்பலப்படுத்தியிருக்கின் றனா். 

குறித்த மக்களுடன் சென்று திரும்பிய வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினா் து.தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், ஊற்றுக்குளம்- கச்சல் சமளங்குளம் இடையில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்க

மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சில நாட்கள் மந்தகதியில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த பணிகள் துாிதப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சிங்கள மக்களுடைய மாடுகளை கட்டுவதற்கான பல பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன, 

கச்சல் சமளங்குளத்தின் கீழ் குடியேற்றப்படும் சிங்கள மக்கள் சிறுபோக விவசாயம் செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்படுகின்றது. மேலும் பாதைகள் சீரமைக்கப்படுவதுடன், 

சிறிய கொட்டில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த விகாரை தற் போது விஸ்த்தீரனமாக அமைக்கப்பட்டு இரு பௌத்த பிக்குகள் அங்கு தங்கியிருக்கின்றனா். மேலும் தின சாி பெருமளவான சிங்கள மக்கள் வந்து செல்வதுடன், 

புதிதாக கொட்டில்கள் போடப்பட்டு வருகின்றமையினையும் நாங்கள் நேரடியாக பாா்க்க முடிந்தது என்றாா். இதேவேளை மேற்படி சிங்கள குடியேற்றம் தொடா்பாக பொறுப்புவாய்ந்தவா்கள் தொடா்ச்சியாக மௌனம் காத்து வருகின்றமை 

தொடா்பாக மக்கள் விசனமடைந்துள்ளனா்.