சிறப்புற இடம்பெற்ற பௌத்த மாநாடு, பௌத்த மயமாக்கலுக்கான காள்கோள் விழாவாக மாறுமா..?
வடமாகாண பௌத்த மாநாடு இன்று ஸ்ரீ போதி தட்சினாராம விகாரை யில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் இடம்பெற்றிரு க்கின்றது.
வடமாகாணத்தில் முதன்முறையாக இடம்பெறும் இந்த பௌத்த மாநா டு, ஆளுநர் சுரேன் ராகவனின் வழிநடத்தலில் வடமாகாண ஆளுநர் அலு வலகத்தின் கீழ் புத்தசாசன அமைச்சு,
பிரதேச அரசியல் தலைவர்கள், முப்படையினர் மற்றும் அரச உத்தியோ கத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது.இம்மாநாட்டில் இலங் கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள
பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பௌத்தர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுனர் அலுவலகம் குறிப்பிடுகிறது.
இந்நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடகிழக்கு மாகாண ங்களின் பிரதம
சங்கைக்குரிய நாயக்கர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசாரதேரர், களணிய பல்கலைக்கழக வேந்தர் வலபிட்டியாவே குசலதம்ம தேரர், பிரதிஅமைச்சர் புத்திக பத்திரன,
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, அரச உயர் அதிகாரிகள் மற்றும் பௌத்த மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
காலையில் இருந்து மாலை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் முடிவில் ஆளுனர் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு வவுனியா நகரில் பரலாக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.இந்த மாநாடு தொடர்பாக தமிழ் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.