கடத்திவந்த கஞ்சாவை போட்டுவிட்டு ஓடியவா், மாட்டினாா் மூடிய அறைக்குள் சாட்சியால் அடையாளம் காணப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
கடத்திவந்த கஞ்சாவை போட்டுவிட்டு ஓடியவா், மாட்டினாா் மூடிய அறைக்குள் சாட்சியால் அடையாளம் காணப்பட்டாா்..

யாழ்.நாவற்குழி பகுதியில் கஞ்சா கடத்திவந்த நிலையில் அதிரடிப்படை யினரை கண்டதும் தப்பி ஓடிய வாகனத்தின் சாரதியை நீதிமன்றத்தின் மூடிய அறைக்குள் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றாா். 

யாழ்ப்பாணம் நாவற்குளி பூநகரி சாலையில் யாழ்.பொலிஸ் நிலைய விசேட அதிரடிப் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தன ர். தச்சன்தோப்புப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வானின் சாரதி பொலிஸாரைக் கண்டதும், 

வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். வாகனத்தைச் சோதனை யிட்ட போது அதனுள் மூன்று கிலோ 850 கிராம கஞ்சா இருந்ததைப் பொ லிஸார் கண்டுபிடித்தனர். சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக் கை தாக்கல் செய்தனர்.

தப்பிபோடிய மறவன்புலவைச் சேர்ந்த சாரதியை பொலிஸார் கைது செ ய்தனர். அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அடையாள அணிவகு ப்பு நடாத்தவும் பொலிஸாருக்கு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது. நீதிம ன்றில் மூடிய அறையில் அடையாள அணிவகுப்ப நடைபெற்றபோது 

சாட்சியாகக் கலந்து கொண்ட விசேட அதிரடிப் பொலிஸார், தப்பியோ டிய சாரதியை அடையாளம் காட்டினார். வழக்கு நீதிமன்றில் விசார ணைக்கு எடுக்கப்பட்டபோது தொடர்ந்து சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு