கொழும்பை அபிவிருத்தி செய்வதாக கூறி காணிகளை விற்ற கோத்தா!

ஆசிரியர் - Admin
கொழும்பை அபிவிருத்தி செய்வதாக கூறி காணிகளை விற்ற கோத்தா!

கொழும்பை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ் மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு பிரதேசம் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என்பதால்தான் 94 ஆம் ஆண்டுக்கு பிறகு அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லை. மாறாக அந்த மக்களின் காணிகளை விற்று அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றும் திட்டத்தையே கடந்த மேற்கொண்டது. 

ஆனால் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை உணர்ந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு