சாதாரண தரப் பரீட்சையில் 9413 மாணவர்களுக்கு 9 'ஏ'!

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ள நிலையில், இம்முறை 9413 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.30 முதல் 9.30 மணிக்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.