ஆளுநருக்கு வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள், உணவகம் மீதும், அரச அதிகாாிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாய்கிறது..

ஆசிரியர் - Editor I
ஆளுநருக்கு வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள், உணவகம் மீதும், அரச அதிகாாிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாய்கிறது..

கிளிநொச்சியில் ஆளுநா் தலமையில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிற்கு பெறப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டமையினையடுத்து ஆளுநா் சுரேன் ராகவன் குறித்த உணவகத்திற்கு நோில் சென்று ஆராய்ந்திருக்கின்றாா். 

கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட உணவு பொதியில் புழு காணப்பட்டமை தொடர்பில் ஆளுநர் இன்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

குறித்த உத்தரவுக்கமைய தனியார் உணவகம் மீது கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. குறித்த வழக்கில் 2 நாட்கள் கடையை மூடி சுத்தம் செய்யுமாறு நீதிமன்றினால் பணிக்கப்பட்டது.

நீதிமன்ற கட்டளையையும் மீறி தொடர்ந்தும் குறித்த உணவகம் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தமை தொடர்பில் ஆளுநரிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு இரவு 10 மணியளவில் சென்ற வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக சாடினார்.  

மக்களுக்கு இவ்வாறான சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் கடுமையாக அதிகாரிகளை சாடிய ஆளுநர், குறித்த சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு