SuperTopAds

இனவாதம் இன்றும் தலைவிரித்தாடுகின்றது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆசிரியர் - Admin
இனவாதம் இன்றும் தலைவிரித்தாடுகின்றது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம் பெற்றபொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்குவருமாறு.

இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு  ஸ்ரீலங்கா அரசிடம்  இல்லை. கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்காமைகும்  அந்த இனவாதமெ காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை
கூட்டத்தொடர்: 40
விடயம் 9 : பொதுவிவாதம்
உரையாற்றியவர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இனங்களுக்கிடையேயான முரண்பாட்டை களைந்து இன சமத்துவத்தைபேணுவதில் முக்கிய தடைக் கற்களாக அரசுகளின் அரசியல் விருப்பின்மையும், இனவாத மனப்பான்மையின்  நிலவுகையும், எதிர் மறையான முன்முடிவுகளுமே விளங்குவதா கடர்பன்  பிரகடனம் வெளிப்படுத்துகிறது.

கடந்தவருடம் சிறீலங்காவின் மத்தியமாகாணத்தில் முஸ்லிம்களை இலக்குவைத்துநடத்தப்பட் ட இனவாத வன் முறைகளை  தொடர்ந்து  அதனை விசாரிப்பதற்காக சிறிலங்காமனித உரிமைகள் ஆணைக்குழு 2018  மே 9-12 வரையான காலப்பகுதியில் ஒருவிசாரணையைநடத்தியிருந்தது. அவ்வன்முறைகளால்  பாதிக்க்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  அந்த ஆணைக் குழுவில் ஆஜராகிதம் கண்களால் கண்டவற்றை சாட்சியமாக் வழங்கியிருந்தனர்.

அந்த விசாரணையின் முடிவில் குறித்தவிசாரனை அறிக்கையானது  2018 யூலை மாதம் வெளியிடப்படும் என அந்தவிசாரணைக்குழுவின் ஆணையாளார்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அந்த விசாரணை நடைபெற்று பத்துமாதங்கள் ஆனபோதும் அந்தவிசாரணை அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதோடு இந்த காலதாமதத்திற்கான காரணமும் இன்னமும் சிறிலங்கா மானித உரிமைகள் ஆணைக்குழுவினரால் வெளிப்படுத்தப்படவில்லை.

அதனால்  அந்தவன்முறைகளினால் ஏற்பட்டஉயிரிழப்புகளுக்குஅப்பால் ஏறத்தாழ 450 இற்கும்  அதிகமான  சொத்துடமைகள்  சேதப்படுத்தப்படாதாக சிறில்னக்காவின் பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிலையிலும் ,அவ் வன்முறையினால் பாதிக்கப்பட்டமக்களுக்கானஎந்தவொரு இழப்பீடும் இது வரைவழங்கப்படவில்லை.

 இவ்வன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா மனிதஉரிமைஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மேலதிகமாக குற்றவியல் தடுப்புப்பிரிவுமற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுஆகியனவும் தனிதனியான விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

விசேட அதிரடிப்படையினரலால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு ,ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும்,  இந்தவன்முறைகளின் போதுகாயப்பட்ட முஸ்லிம்களுக்கு  சிகிச்சையளிக்க சில சிங்களவைத்தியர்கள் மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுள்ள நிலையில், பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டுகள்  தொடர்பில  எந்தவொருவிசாரணைகளும் இதுவரைமுன்னெடுக்க்ப்படவில்லை.

ஆக  இந்த இனவன்முறைகள் நிக்ழத்தப்ட்டு ஒரு வருடமாகியும் அதற்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை. இந்தவனுமுறையை தூண்டியதாககுற்றம்சுமத்தப்பட்டசந்தேகநபர்கள் அனைவரும்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள  அதேநேரம் பாதிக்கப்பட்டமக்களுக்கானஎந்தவொரு இழப்பீடும்  இது வரைவழங்கப்படவில்லை.

கனம் உபதலைவர் அவர்களே, இதுவே சிறிலங்காவின் இனவாதம் என்பதைதங்களுக்கு வெளிப்படுத்துகின்றேன்.

HUMAN RIGHTS COUNCIL               Delivered by:-GajendrakumarPonnambalam

40th Session

ITEM 9 – General Debate

 

The Durban Declaration affirmed that  the obstacles to overcoming racial discrimination and achieving racial equality mainly lie in the lack of political will by States, as well as the prevalence of racist attitudes and negative stereotyping”

Following the racist violence that targeted Muslims in the Central province of Sri Lanka last year, the SL Human Rights Commission conducted an inquiry from 9 to 12th of May, 2018. Representatives from the victim community met with commissioners and provided eye witness accounts. 

At the conclusion of the inquiry,  the commissioners stated that a final report will be released by July 2018. But after 10 months, no report has been released and the SLHRC is yet to make an explanation on what has caused the delay. 

Consequently, no compensation has been paid to any of the victims despite Prime Minister himself admitting publicly that over 450 properties were destroyed during the violence apart from several deaths. 

In addition to the SLHRC inquiry, both the TID & CID have carried out separate investigations.

While the STF was accused of beating up Muslims and forcing them to falsely admit that they were in possession of firearms, and complaints having been made against certain Sinhala doctors for refusing to treat the wounded Muslims, no investigations have taken place on these complaints, let alone charges being filed. 

So, even after one year, there had been no justice. All the suspects accused of instigating violence have been bailed out, and no compensation for the victims! That is racism for you, Madam Vice President.